மனிதர்களை 2024ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கோளில் குடியேற்றும் திட்டத்தை, இலாப நோக்கமற்ற நிறுவனமான செவ்வாய் ஒன்று அறிவித்தது. விருப்பமுள்ளவர்கள் செவ்வாய் கோளுக்குப் போகலாம்.
கடந்த சில மாதங்களில் மட்டும் உலகளவில் இருந்து செவ்வாய் கோள் செல்வதற்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. தவிர, கனடா, இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளைத் சேர்ந்வர்களும் விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக, 2லட்சத்துக்கும் மேற்பட்டோரில் இருந்து 1058 பேர் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். 2ஆம் கட்டத்தில் சிறப்பு பயிற்சியில் பங்கேற்கும் அடிப்படையில் இறுதியில் 24பேருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அளிக்கப்படும். இந்த 24பேரை 2024ஆம் ஆண்டு அளவில் 6 முறையாக செவ்வாய் கோளுக்கு அனுப்ப இருப்பதாக செவ்வாய் ஒன்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செவ்வாய் கோள் பயணத்தில் திரும்பி வருவதற்கான பயணச் சீட்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் தலைமை பொறியியலாளர் பேசுகையில், செவ்வாய் கோளில் குடியேறும் திட்டத்தை அரசு சாரா நிறுவனம் நடைமுறைப்படுத்த முடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
அந்தத் தி்ட்டம் ஒரு பெரிய உலக மோசடி ஆகும் தான். பொதுமக்களை ஏமாற்றி அதிக பணத்தை மோசடி செய்வதே அதன் இலக்கு என்ற ஐயம் எழுந்துள்ளது.
20ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி வீரரை செவ்வாய் கோளுக்கு அனுப்ப நாசா போன்ற விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுவரை, உலக நாடுகளில் அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பிய ஆய்வு விண்கலம் மட்டுமே செவ்வாய் கோளில் தரையிறங்கியுள்ளது. அது, மனிதரை ஏற்றுச்செல்லும் விண்கலம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.