தியன்கொங்-2 எனும் விண்வெளி ஆய்வுக் கலனை, சீனா 2015ஆம் ஆண்டு அளவில் செலுத்தி, குறிப்பிட்ட அளவில் விண்வெளி ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது. மேலும், லாங்மார்ச்-7 ஏவூர்தி மற்றும் தியன்ட்சொவ் எனப்படும் சரக்கு விண்கலம் தொடர்பான ஆய்வும் தயாரிப்புப் பணிகளும் 2016ஆம் ஆண்டு அளவில் நிறைவேற்றப்படும்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவிருக்கும் சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டத்தின் தலைமை வடிவமைப்பாளர் ட்சோ சியன்பிங் மார்ச் 2ஆம் நாளன்று பேட்டியளித்தபோது இத்தகவலை தெரிவித்தார்.