• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் யு கு இனத்தின் மொழி கையேற்றல் 1
  2014-03-03 10:15:22  cri எழுத்தின் அளவு:  A A A   

அவர் யு கு இனப் பண்பாட்டை மிகவும் நேசிக்கிறார். அன்பு மற்றும் பொறுப்புணர்வைச் சார்ந்து, அவர் இந்த ஆய்வு பணியகத்தில் பத்து ஆண்டுகளாக பணி புரிந்திருக்கிறார். யு கு மொழி, யு கு இனப் பண்பாடு ஆகியவை தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்து, தொகுப்பது, இந்த ஆய்வுப் பணியகத்தின் முக்கிய பணிகளாகும். எழுத்து மூலப் பதிவுகள் இல்லை என்பதால், அர்ஸ்லனும் அவரது பணியாளர்களும், ஆயர் பிரதேசத்தில் நுழைந்து, அதிகமான ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருந்தது. அர்ஸ்லன் கூறியதாவது:

"ஆயர் பிரதேசத்துக்கு அடிக்கடி சென்று, ஆயர்களையும், நாட்டுப்புறக்கலைஞர்களையும் ஆகியோரை சந்திக்கின்றோம். அவர்கள் பேசும் நாட்டுப்புறக் கதைகள், காவியங்கள், நாட்டுப்புறச் செவிவழிக் கதைகள், பழமொழிகள், புதிர்கள் ஆகியவற்றைப் பதிவுச் செய்கிறோம். தவிர, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் யு கு இன மொழியைப் பதிவுச் செய்கிறோம். அதற்கு பின் இந்த தகவல்களை கணினியில் பதிவுச் செய்து, தொகுக்கின்றோம்" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040