ஓர் அண்டை நாட்டையோ அல்லது எந்த ஒரு நாட்டையோ எதிரியாக சீனா கருதாது. சீனாவின் வரலாற்றையும் அனுபவத்தையும் பார்க்கும்போது அமைதியை பேணுக்காப்பதற்கு தேசிய பாதுகாப்பு ஆற்றல் தேவைப்படுகின்றது என்று சீனாவின் 12வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர் புஃயிங் அம்மையார் 4ஆம் நாள் கூறினார்.
அமைதி வளர்ச்சி பாதையில் சீனா ஊன்றி நின்று வருகின்றது. இதுவே வெற்றியடைய செய்வது மற்றும் சரியானது என்பதை உண்மைகள் நிரூபிக்கின்றன. சீனாவின் அரசியல் அமைப்புச் சட்டப்படி, தேசிய பாதுகாப்பு, மக்களின் அமைதி வாழ்க்கை உற்பத்தி ஆகியவற்றை சீனாவின் பாதுகாப்பு ஆற்றல் முக்கியமாக கொண்டிருக்கின்றது. தற்காப்பு ஆற்றல் இதுவாகும் என்று அவர் கூறினார்.