• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2014ஆம் ஆண்டு சீனத் தூதாண்மை துறையில் முக்கிய நிகழ்வுகள்
  2014-03-08 16:44:02  cri எழுத்தின் அளவு:  A A A   

2014ஆம் ஆண்டு, சி.ஐ.சி.ஏ எனும் மாநாடு, ஏபெக் ஆண்டுக் கூட்டம் ஆகியவை, சீனாவின் வெளியுறவுத் துறையில் மிகவும் முக்கியமான நிகழ்வுகளாக திகழ்கின்றன. 8ஆம் நாள் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இதைத் தெரிவித்தார்.

சி.ஐ.சி.ஏ அழைக்கப்படுகிற ஆசியாவில் பரஸ்பர பரிமாற்றம் மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நவடிக்கைகள் பற்றிய மாநாடு மே திங்களில் சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெறும். அதற்கிடையில், புதிய ஆசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தை உருவாக்கி, அமைதி, நிலைப்புத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு படைத்த புதிய ஆசியாவை கூட்டாக கட்டியமைக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக, வாங் யீ சுட்டிக்காட்டினார்.

நவம்பர் திங்களில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில், ஆசிய-பசிபிக் கூட்டாளியுறவு என்ற தலைப்பில் புதிய சானதைகள் அடைய வேண்டும். குறிப்பாக, ஆசிய-பசிபிக் தாராள வர்த்தக மண்டலத்தின் கட்டுமானத்தில் புதிய பெரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040