• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன இணைய வணிக அலுவல் வளர்ச்சி
  2014-03-10 11:07:38  cri எழுத்தின் அளவு:  A A A   
2013ஆம் ஆண்டு சீன இணைய வணிக அலுவலின் மொத்த வியாபாரத் தொகை 10லட்சம் கோடி யுவானைத் தாண்டக் கூடுமென மதிப்பிடப்படுகிறது. சீன வணிக அமைச்சகத்தின் இணைய வணிக அலுவல் பிரிவின் துணை தலைவர் சாங்பேதுங் 9ஆம் நாள் இதைத் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு சீனாவின் இணைய வணிக சில்லறை விற்பனைத் தொகை ஒரு லட்சத்து 85ஆயிரம் கோடி யுவானாகும். கடந்த ஐந்தாண்டுகளாக, அதன் சராசரி அதிகரிப்பு விகிதம் 80விழுக்காடாகும். இவ்வாண்டு சீனாவின் இணைய வணிக சில்லறை விற்பனையளவு அமெரிக்காவைத் தாண்டி உலகில் முதலிடத்தை வகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இணைய வணிக சில்லறை விற்பனைத் துறையின் சட்டம் மற்றும் வரையறை அமைப்பு முறையின் கட்டுமானத்தைச் சீனா வலியுறுத்தி முன்னேற்ற வேண்டும். தற்போது, இணைய வணிக அலுவலுக்கான சட்டமியற்றல் பணி துவங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040