• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சரின் பேட்டி
  2014-03-13 19:32:44  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் ஆண்டுக்கூட்டத்தொடர் 13ஆம் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்தது. அதற்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், சீனாவின் உள்நாட்டு விவகாரம் மற்றும் தூதாண்மை பற்றி சீன, அன்னிய செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். புத்தாண்டில் சீன வளர்ச்சியின் பல இலக்குகளை அவர் விவரித்து, சீர்திருத்தத்தை ஆழமாக முன்னேற்றி, பொருளாதாரத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்யும் மன உறுதியை தெரிவித்தார். பல்வகை நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது, சீர்திருத்தத்தை முன்னேற்றுவதற்குத் திறவுக் கோலாகும் என்று அவர் தெரிவித்தார்.

மக்களின் கவனத்தை ஈர்க்கும் மலேசிய விமான நிறுவனத்தின் தொடர்பிழந்த விமான சம்பவம் பற்றி அவர் முதலில் கூறியதாவது:

"இது சர்வதேச மீட்புதவி நடவடிக்கையாகும். பல நாடுகள் தேடுதல் மற்றும் மீட்புதவியில் பங்கெடுத்துள்ளன. தொடர்புடைய வாரியங்கள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, இச்சம்பவத்தின் காரணத்தைக் கண்டறிந்து, தொடர்பிழந்த விமானத்தைக் கண்டுபிடித்து, இது தொடர்பான விடயங்களை சரியாக கையாள வேண்டும் என்று சீனா கோரியுள்ளது" என்றார் அவர்.

இச்சம்பவம், சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கைக்கும், வெளிநாடுகளில் சீன மக்களின் சுற்றுலாவுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சர்வதேச சமூகம் கவலைப்படுகிறது. இது பற்றி லீ கெச்சியாங் பேசுகையில், சீனா வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை தொடர்ந்து முன்னேற்றும் என்றும், மேலதிக சீன மக்கள் வெளிநாடுகளில் சுற்றுலா மேற்கொள்வர் என்றும் தெரிவித்தார். சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மூலம் வெளிநாடுகளில் உள்ள சீன மக்களின் பாதுகாப்பை சீன அரசு இயன்ற அளவில் உத்தரவாதம் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு சீன அரசின் பல இலக்குகள் பற்றி அவர் கூறியதாவது:

"இவ்வாண்டு அறைகூவல்கள் இன்னும் கடினமாக இருக்கின்றன. எதிர்காலத்தில் இவை மேலும் சிக்கலாகலாம். பொருளாதார அதிகரிப்பை நிதானப்படுத்தி, வேலைவாய்ப்பை வழங்குவதை உத்தரவாதம் செய்யும் அதே வேளையில், பணவீக்கத்தைத் தடுத்து, ஆபத்துக்களை கட்டுப்படுத்த வேண்டும். பல இலக்குகளை நனவாக்க, சம நிலையை நாட வேண்டும்" என்றார் அவர்.

புத்தாண்டு சீனத் தூதாண்மைப் பணி பற்றி லீ கெச்சியாங் கூறியதாவது:

"அமைதியான நட்பும் அமைதியான சகவாழ்வும், சீன மக்கள் மற்றும் அண்டை நாட்டு மக்களின் பொது விருப்பமாகும். கூட்டாக முயற்சிகள் மேற்கோண்டு, கூட்டு நலன்களை விரிவாக்கி, முரண்பாடுகளைக் குறைக்க வேண்டும். அதன் மூலம் சீனாவும் அண்டை நாடுகளும் சுமூகமாக சகவாழ்வு நட்ததி, பொது மக்களுக்கு நன்மை பயக்க முடியும்" என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040