திரு. வி.நாராயணன் (மாலன்) புதிய தலைமுறை ஊடக தனியார் நிறுவனத்தின் இயக்குனர் (திட்டமிடல் மற்றும் வளர்ச்சி) ஆவார். மிகவும் பிரபலமான புதிய தலைமுறை என்ற முழுநேர செய்தித் தொலைக்காட்சி மற்றும் புதுயுகம் என்ற பொழுதுபோக்கு தொலைக்காட்சி அலைவரிசைகளை இந்த புதிய தலைமுறை ஊடக தனியார் நிறுவனம் இந்தியாவில் நடத்தி வருகிறது. மேலும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற வாராந்திர இதழ்களின் பதிப்பாசிரியராகவும் திரு. வி.நாராயணன் (மாலன்) விளங்குகிறார்.
முன்னதாக, சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் சன் செய்திகள் என்ற இந்திய மொழிகளில் முதலாவது முழுநேர செய்திக் தொலைகாட்சி அலைவரிசையை தொடங்கிய பெருமைக்குரியவர் திரு.வி.நாராயணன் அவர்களே. மேலும், இந்தியா டுடே (தமிழ்) தினமணி, குமுதம் மற்றும் குங்குமம் போன்ற முக்கிய தமிழ் இதழ்களின் பதிப்பாசிரியராக பணியாற்றி மிகவும் புகழ்பெற்றவர்.
அமெரிக்காவில் காய்னஸ்வில்லேவிலுள்ள ஃபுளோரிடா பல்கலைகழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், சிறப்பு பதிப்பிப்பு படிப்பில் முதன்மை பெற்று விருதோடு மதிப்பளிக்கப்பட்டவராவார்.
2000 முதல் 2006 ஆம் ஆண்டு வரை சன் செய்திகள் தொலைக்காட்சியில் 840 நடப்பு விவகார நிகழ்ச்சிகளை நேரலையில் வழங்கியிருக்கிறார். மேலும், தேர்தல்கள், வரவுச் செலவுக் கூட்டத் தொடர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போதான சிறப்பு நேரலை நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். டர்பனில் நடைபெற்ற காமன்வெல்த் தலைவர்களின் கூட்டம், போர்ச்சுக்கலின் லிஸ்பனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க மற்றும் இந்திய ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு ஆகிய அடையாள முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சென்னையில் தூர்தர்சன் தொலைக்காட்சியில் நேரலை தொகுப்பாளராக தேர்தல் ஆய்வு வழங்கியுள்ளார்.
1989 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகளுக்கு மேலாக பிபிசி தமிழ் ஒலிபரப்பில் மாதரந்திர செய்தி மடல் வழங்குவதில் தொடர்ந்து சேவைப் புரிந்துள்ளார்.
முன்னாள் இந்திய அரசுத் தலைவர் ஆர்.கே.நாராயணன், தலைமையமைச்சர்கள் நரசிம்மராவ், வாய்பாய் ஆகியோர் பல நாடுகளில் அரசுமுறை பயணங்கள் மேற்கொண்டபோது, ஊடகப் பிரதிநிதியாக சென்றுள்ளார்.
திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைகழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேரவைகளில் தமிழ்நாடு ஆளுநரால் நியமிக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். சென்னை பல்கலைகழகத்தின் இதழியல் அவை, மதுரை காமராஜ் பல்கலைகழகத்தின் இதழியல் அவை, தேசிய புத்தக டிரெஸ்ட் ஆலோசனைக் குழு, தமிழ்நாடு நூலக சீரமைப்பு ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினராக நியமிக்கப்பட்டும் செயல்பட்டுள்ளார்.
மெல்போர்ன் பல்கலைகழகத்திலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும் ஊடகம் தொடர்பான அம்சங்கள் மற்றும் இலக்கியம் பற்றி விரிவுரைகள் ஆற்றியுள்ளார். பனோஸ் தெற்காசியா அமைப்பு ஏற்பாடு செய்த இந்திய பாகிஸ்தான் ஊடக தொகுப்பு உரையாடல் பகுப்பாய்வு மற்றும் நேபாளில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான தெற்காசிய மாநாடு ஆகியவற்றிற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களில் இவரும் ஒருவராவார்.