• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து இனத்தவரின் வண்ணமயமான ஆடைகள் 2
  2014-04-02 12:59:32  cri எழுத்தின் அளவு:  A A A   

அன்பான நேயர்களே, வானவில் பழங்குடி து இன பூங்காவுக்குச் சென்று, து இன ஆடைகளின் தனிச்சிறப்பு மிக்க ஈர்ப்பாற்றலை உணர்ந்து கொளவோமா?

வரலாற்றுப் பதிவின்படி, பண்டைக்காலத்தில் து இன மகளிர், இவ்வினத்தின் ஆடவரைப் போல் போர்க் களத்தில் போரிட்டு வந்தனர். அவர்கள் படைவீரர்களின் கவச ஆடையையும் தலைகவசத்தையும் அணிந்து, துணிவு மிக்கவராக செயல்பட்டிருந்தனர். படிப்படியாக, து இன மக்கள், கவச பாணியுடைய ஆடைகளையும், தலைகவச பாணியுடைய அலங்காரப் பொட்களையும் அணிய தொடங்கினர். அவை இன்று வரை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றன. அதற்கு பின், து இன மக்கள், கால்நடை வளர்ப்புப் துறையிலிருந்து விலகி வேளாண் துறையில் ஈடுபடத் துவங்கினர். து இன மகளிர், வேளாண் துறை உற்பத்தி நடவடிக்கையிலும், வீட்டுப் பராமரிப்பு பணிகளிலும் முக்கியமாக ஈடுபட்டு வந்துள்ளனர். கடினமான, அதிகமான வேளாண் உழைப்பில், அவர்கள் நியுதார் என்ற தலை அலங்காரப் பொருளை அணிவது வசதியற்றதாக இருந்தது. படிப்படியாக புதிய தலை அலங்காரப் பொருளால் நியுதார் அணிவது மாறிவிட்டது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040