காலத்தின் வளர்ச்சியுடன், அன்றைய து இன ஆடைகளில், சில ஆடைகள் இன்று அழிந்து விட்டன. சில ஆடைப் பாணிகளில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Qiao Zhi Minகின் அறிமுகத்தின்படி, முன்பு து இன மகளிரின் ஆடைகள் மிகவும் வண்ணமயமாக இருந்தன. அவர்களின் சட்டைக்கைகள், சிவப்பு, பச்சை, கறுப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய ஐந்து வண்ணங்களில் காணப்பட்டன. சிவப்பு, சூரியனை அடையாளப்படுத்துகின்றது. சூரியன், உலகிலுள்ள அனைத்து பொருட்களும் தோன்ற காரணமாகும். பச்சை வண்ணம், காடு மற்றும் புல்வெளியை அடையாளப்படுத்துகின்றது. கறுப்பு வண்ணம், நிலத்தை குறிக்கிறது. மஞ்சள் வண்ணம் அறுவடையையும், சட்டையின் முன் கைப் பகுதியின் வெள்ளை வண்ணம், தூயமை மற்றும் அன்பையும் அடையாளப்படுத்துகின்றன. து இனத்தின் ஐந்து வண்ண சட்டை மிகவும் புகழ் பெற்றதாகும்.
தற்போது சட்டைக் கைகளிலுள்ள வண்ணங்களின் எண்ணிக்கை, ஐந்திலிருந்து ஏழு வரை அதிகரித்துள்ளது. அவை மிகவும் அழகான ஆடைகள் ஆகும். காலத்தின் வளர்ச்சியுடன், சட்டையின் வண்ணத்தின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.