சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் கடல் விவகாரப் பணியகத்தைச் சேர்ந்த 30க்கு மேற்பட்ட பணியாளர்கள், ஹாய்சுன்-21 எனும் கப்பலுடன் இணைந்து, 4ஆம் நாள் போ ஆவ் கடற்பரப்பில் நுழைந்து, நீர்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014ஆம் ஆண்டுக் கூட்டம் நடைபெறும் முக்கிய இடத்தின் அருகே நீர் மற்றும் தரைவழி பாதுகாப்புக்கான ஏற்பாடு நிறைவேற்றப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.