ஆசியாவின் அழகை கண்டறிவோம் எனும் புகைப்படக் கண்காட்சியில் திரு. மாலனும் சிலரெதன் செனரத்தும்
சீன வானொலி நிலையம், போ ஆவ் மன்றம் ஹைநான் மாநில பரப்புரை அலுவலகம், ஹைநான் வானொலி தொலைக்காட்சி பணியகம் ஆகியவை கூட்டாக நடத்திய ஆசியாவிந் அழகைக் கண்டறிவோம் என்ற புகைப்படக் கண்காட்சி 8ஆம் நாள் ஹைநான் மாநிலத்தின் போ ஆவ் மாவட்டத்தில் துவங்கியது.
கடல்வழி புதிய பட்டுப் பாதை என்ற பல்லூடக நடவடிக்கைகளில் ஒன்றான இந்த புகைப்படக் கண்காட்சி முழு உலக நேயர்களாலும் தேடப்பட்டு பகிரப்பட வேண்டும். முழு உலகிலும் ஆசிய பண்பாட்டையும் நாகரிகத்தையும் கொண்டுச்செல்ல வேண்டும். உலக மக்களுக்கிடையில் நட்புப்பூர்வ பரிமாற்றங்களை வலுப்படுத்த வேண்டும் என்று சீன வானொலி நிலையத்தின் இயக்குநர் வான் கொட நியன் தெரிவித்தார்.