10 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 20 ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் பொறுப்பாளர்களும் அதில் கலந்து கொண்டதோடு, "எண்ணியல் கால ஓட்டத்தில் ஊடகத் துறையின் வளர்ச்சி வாய்ப்பு மற்றும் அறைகூவல்" என்ற தலைப்பில் விவாதம் நடத்தியுள்ளனர். சில கட்டுப்பாடுகளும் தடைகளும் நிலவி வருவதால், ஆசியாவின் ஊடகங்கள் பன்னாடுகளில் அவற்றின் ஒலியை எழுப்புவதே கடினமாக உள்ளது. இதற்காக, பல தரப்பு ஒத்துழைப்பை தேடி, கூட்டாக வெற்றியடைய வேண்டும் என்று கலந்துகொண்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.