பிரதேச அளவில் பன்முகமான பொருளாதாரக் கூட்டாளியுறவு ஒப்பந்தம், பசிபிக் பெருங்கடல் அளவில் செயற்நோக்கு பொருளாதாரக் கூட்டாளியுறவு ஒப்பந்தம் ஆகிய இரு ஒப்பந்தங்களும் ஒருங்கிணைந்த முறையில் நடந்து, ஒன்றுக்கொன்று தூண்டுதல் அளித்து நடைமுறைப்படுத்தப்படலாம். பிரதேச அளவில் பன்முகமான பொருளாதாரக் கூட்டாளியுறவு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஆக்கமுடன் முன்னேற்றி, 2015ஆம் ஆண்டுக்குள் இதற்கான உடன்படிக்கையை உருவாக்க சீனா வேறு தரப்புகளுடன் இணைந்து முயற்சி எடுக்க விரும்புகிறது.
சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 10ஆம் நாள் போஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.