சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங், போ ஆவ் ஆசிய மன்றப் பேரவை உறுப்பினர்களை 10ஆம் நாள் ஹாய்நானின் போ ஆவ் நகரில் சந்தித்துரையாடினார்.
உலகத்துடன் நெருக்கமாக இணைந்தால்தான், இப்போது இருப்பதை விட பெரும் வளர்ச்சியை ஆசியா பெற முடியும். பொருளாதார வளர்ச்சிக்கான ஆசிய நாடுகளின் உட்புற ஆற்றலை வலுப்படுத்துவது பற்றி நடப்பு ஆண்டுக் கூட்டத்தில் விவாதம் நடத்துவதே, ஆசியாவின் உயர் நிலை வளர்ச்சியைத் தூண்ட உதவும் என்று லீகெச்சியாங் குறிப்பிட்டார்.
போ ஆவ் ஆசிய மன்றத்துக்கு ஆதரவளிக்கும் சீனாவுக்கு இம்மன்றப் பேரவை உறுப்பினர்கள் நன்றி தெரிவித்ததோடு, சீனாவுடனும் தொடர்புடைய தரப்புகளுடனும் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதாகவும் கூறினர்.