போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2014-ஆம் ஆண்டுக்கூட்டம் ஏப்ரல் 10-ஆம் நாள் சீனாவின் ஹெய்நான் மாநிலத்தில் துவங்கியது. சீனத்தலைமையமைச்சர் லீக்கேச்சியாங்கும், 8 நாடுகளின் தலைவர்களும் துவக்க விழாவில் கலந்துக் கொண்டனர். ஆசியாவின் புதிய எதிர்காலம்: புதிய வளர்ச்சி வாய்ப்புக்களைக் கண்டறிவது என்பது நடப்பு ஆண்டுக்கூட்டத்தின் தலைப்பாகும். ஆசிய வளர்ச்சியின் புதிய எதிர்க்காலத்தைத் திறந்து வைப்பது என்ற தலைப்பில், லீக்கேச்சியாங் துவக்க விழாவில் உரைநிகழ்த்தினார். ஆசிய பொருளாதார ஒருமைப்பாடு மற்றும் பிரதேச ஒத்துழைப்பைத் தூண்டுவதில் சீனாவின் கொள்கைகளை அவர் தனது உரையில் முக்கியமாக விளக்கி கூறினார். அவர் கூறியதாவது:
வளர்ச்சியே, ஆசிய பிரச்சினையைத் தீர்க்கும் அடிப்படை வழிமுறை. வளர்ச்சியால் உலகத்தை மாற்றலாம். வளர்ச்சி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். எனவே, ஆசிய நாடுகள் வளர்ச்சியை முதல் கடமையாக கருத வேண்டும் என்றார் அவர்.
மேலும், புதிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கண்டறிவது, தற்போது ஆசியாவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டு வளர்ச்சி என்ற பொது இலக்கை கடைபிடித்து, ஆசிய நலன்கள் மிகுந்த பொது சமூகத்தை உருவாக்க வேண்டும். இசைவாக வளரும் நிலைமையை உருவாக்கி, ஆசிய எதிர்காலத்தை நோக்கும் பொது சமூகத்தை உருவாக்க வேண்டும், அமைதியான வளர்ச்சிச் சூழலைப் பேணிக்காத்து, ஆசியப் பொறுப்பு மிக்க பொதுச் சமூகத்தை உருவாக்க வேண்டுமென லீக்கேச்சியாங் தெரிவித்தார்:
RCEP என அழைக்கப்படுகின்ற பிரதேச பன்முகப் பொருளாதார கூட்டாளி உறவு உடன்படிக்கை, கிழக்காசிய பிரதேசத்தில் மிக அதிகமான உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்கள் கொண்ட மிக பெரிய வர்த்தக உடன்படிக்கையாகும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, இவ்வுடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தையை ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற சீனா விரும்புகின்றது. 2015ஆம் ஆண்டுக்குள், இவ்வுடன்படிக்கை வெற்றிகரமாக உருவாக சீனா முயற்சிகள் மேற்கொள்ளும் என்று லீக்கேச்சியாங் கூறினார்.
தவிரவும், சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு இலக்கு குறித்து, லீக்கேச்சியாங் முக்கியமாக விளக்கினார்.
பொருளாதாரத்தில் ஏற்படும் குறுகிய கால ஏற்றத்தாழ்வுகளுக்காக, பொருளாதார அதிகரிப்பை விரைவாக முன்னேற்றும் தீவிர கொள்கையை சீனா மேற்கொள்ளாது. பொருளாதாரத்தின் நீண்டக்கால சீரான வளர்ச்சியில் கவனம் செலுத்தி, சீனப் பொருளாதார தொடரவல்ல சீரான வளர்ச்சியை நனவாக்க முயற்சிகள் மேற்கொள்கின்றோம். தற்போது, கடைபிடிக்கும் கொள்கைகள் கொண்டு, நிகழக்கூடிய பல்வகை இடர்பாடுகளையும் அறைக்கூவல்களையும் செல்வனே கையாள முடியும் என்றார் லீக்கேச்சியாங்.