வளர்ச்சி, ஆசிய நாடுகளின் முதல் கடமையாகும் என்று 10ஆம் நாள் துவங்கிய போ ஆவ் ஆசிய மன்றத்தின் துவக்க விழாவில், சீன தலைமை அமைச்சர் லி க் ச்சியாங் முக்கிய உரை நிகழ்த்துக்கையில் தெரிவித்தார்.
தொடர்புடைய நாடுகளுடன் இணைந்து, வங்காளதேசம்-சீனா-இந்திய-மியன்மார் பொருளாதாரப் பாதை, சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை, சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் 2வது கட்ட ஆக்கப்பணி, பட்டுப்பாதை ஆக்கப்பணி ஆகியவற்றை உருவாக்க சீனா விரும்புகிறது என்று லி க் ச்சியாங் தெரிவித்தார்.
இது மிக சிற்ந்த உரை தான். பட்டுப்பாதையும், பஞ்ச சீல கோட்பாடுகளும் இந்தியாவுடன் நெருங்கியவை என்று நமது செய்தியாளருக்கு பேட்டியளித்த போது இந்தியாவின் புதிய தலைமுறை செய்தி ஊடக குழுமத்தின் பிரதிநிதி திரு மாலன் பாராட்டு தெரிவித்தார்.