ஏப்ரல் 7ஆம் நாள் முதல் சன்னல் எனப்படும் உரையாடல் நிகழ்ச்சியை துவங்குகிறோம். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அல்லது துறையை சார்ந்ததாக இந்த உரையாடல் அமையும். ஈஸ்வரியும் கலைமணியும் இணைந்து திங்கள்கிழமையிலும் வியாழக்கிழமையிலும் சன்னல் நிகழ்ச்சிகளை வழங்குகிறோம்.
சன்னலைத் திறந்தால் காற்றோட்டம் பெறுவதை போல நமது மனங்களைத் திறந்தால், புதிய கருத்துக்களைப் பரிமாறலாம், உரையாடலாம், உறவாடலாம்.
நேயர்களே, நிகழ்ச்சிகளில் விவாதிக்கப்படும் தலைப்பு குறித்து ஏதாவது கருத்து இருந்தால் எமக்கு தெரிவியுங்கள்.