இந்திய புதிய தலைமுறை ஊடகத்தின் வளர்ச்சி மற்றும் திட்டப் பிரிவின் தலைவர் திரு மாலன் 14ஆம் நாள் திங்கள்கிழமை சீன வானொலி நிலையத்தில் பயணம் மேற்கொண்டார். சீன வானொலி துணைத் தலைமை இயக்குநர் மா வே குங், திரு மாலனைச் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில், போஆவ் ஊடகத் தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டம், இரு செய்தி ஊடகங்களுக்கிடை பரிமாற்றமும் ஒத்துழைப்பும் முதலியவை பற்றி அவர்கள் ஆழமாக கருத்துக்களைப் பரிமாற்றிக்கொண்டனர். மாலையில் திரு மாலன் முறையே தமிழ்ப் பிரிவு மற்றும் ஆங்கில பிரிவுக்கு பேட்டி அளித்தார். தவிர, தமிழ்ப் பிரிவின் பணியாளர்களுடன் காலந்தாய்வு நடத்தி, இந்தியாவின் செய்தித் துறை நிலைமை பற்றி அறிமுகம் செய்து, பணியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.