நாம் வாழ்கின்ற விண்வெளி, ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடிப்பால் உருவானது. இப்போது மிகவும் புகழ்பெற்று பரவி வரும் The Bid Bang Theory எனும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் பாடலில் இதை தெரிவிக்கின்றது. இந்த மாபெரும் வெடிப்பு நிகழ்வதற்கு முன், விண் வெளி ஒரு தனித்தன்மையான வடிவத்தில் நிலவியது. அந்த மாபெரும் வெடிப்பு பின்பு, விண்வெளி மிக விரைவாகநம்ப முடியாத வேகத்தில் அதிகரித்த வளர்ந்து, தற்போதைய வடிவமாக மாறியது. இந்த மாற்றமானது, சுமார் ஒரு வினாடியை 40 கோடி பதுகிகளாக பிரித்தால், அதில் கிடைக்கு கனநேரத்திற்கு குறைந்த நேரத்தில் நிறைவேற்றியது என்று அறிவியல் துறையில் பொதுவாக கருதுகின்றது. அமெரிக்க இயற்பியலாளர்கள் மார்ச் 17-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், விண்வெளி மாபெரும் வெடிப்பு நிகழ்ந்தபோது, ஏற்பட்ட எதிரொலியும் கண்டறியப்பட்டது என்று கூறியது.
தென்துருவத்தில் வைக்கப்பட்டுள்ள வானியல் தொலைநோக்கி மூலம், விண்வெளியில் பரவுகின்ற மின்காந்த அலைகளை இனம்கண்டு ஆய்ந்தபோது, அமெரிக்க அறிவியலாளர்கள் இந்த எதிரொலியைக் கண்டறிந்தனர். இந்த மின்காந்த அலைகள், விண்வெளியில் இரகசியமாக இருக்கின்ற புதை படிவங்கள் போன்றவை. அவற்றின் மூலம், விண்வெளியின் துவக்கக் காலம் பற்றிய பல தகவல்களை நாம்மால் அறிந்துகொள்ள முடியும். அறிவியல் மேதை ஐயன்ஸ்டன் இந்த எதிரொலி பரவியிருப்பதை முன்பே மதிப்பீடுள்ளார். இப்போது, அமெரிக்க அறிவியலாளர்களின் ஆய்வு முடிவு, ஐயன்ஸ்டனின் கூற்றை உறுதிப்படுத்தியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு முடிவானது, அடிப்படை அறிவியலுக்கு, முக்கிய பங்காற்றியது. ஒரு நாட்டின் அடிப்பைட அறிவியல் நிலை, அந்த நாட்டின் பொறியியல் தொழில் நுட்பத்தின் நிலையைத் தீர்மானிக்கும். அதனால், ஒரு நாட்டின் பொறியியல் தொழில் நுட்பத்தின் முக்கியம் என்ன?
தற்போது, உலகளவில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில், பல முக்கிய முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பங்கள் உள்ளன. எனவே, அவற்றிடமிருந்து வாங்கி, இதர நாடுகள், இந்தத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தலாம். மேலும், தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும்போது, பிரச்சினை ஏற்பட்டால், இந்த வளர்ச்சியடைந்த நாடுகளிடமே தான் மீண்டும் உதவி கேட்ட வேண்டியுள்ளது. எனவே, இந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு, பல துறைகளில் சிறப்பு கருத்து வெளிப்பாட்டு உரிமை உள்ளது.
அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், அடிப்படை அறிவியல் துறையில் முன்ணணியில் இருக்கிறது. அதனால் தான், தற்போது வளர்ச்சியடைந்த நாடுகளிடம் இந்த முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பங்கள் இருப்பதற்கு காரணமாகும்.