• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செல்லிட பேசி தந்தை: கூப்பர்? ஸ்டுபிர்ஃபீல்டு?
  2014-04-17 10:15:00  cri எழுத்தின் அளவு:  A A A   

செல்லிட பேசி மூலம், தொலைத் தொடர்பு, இணையத்தில் உலாவருதல், பொழுதுபோக்கு, இசை முதலிய சேவைகள் பெறுவது, நமது அன்றாட வாழ்க்கையில் இணைபிரியாதவை. உலக தொலைத் தொடர்பு ஒன்றியம் 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், தற்போது, உலகளவில் செல்லிடபேசியைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 680கோடி அடைந்துள்ளது. இது, உலகின் பொது மக்கள் தொகையில் 96விழுக்காட்டு வகிக்கிறது. செல்லிட பேசியைப் பயன்படுத்துகின்ற போது, அதனைக் கண்டுபிடித்தவர் பற்றி, உங்களுக்கு தெரியுமா?

1973-ஆம் ஆண்டு, மார்ட்டீன் கூப்பர், உலகில் முதலாவது செல்லிட பேசியைக் கண்டுபிடித்தார். நவீன செல்லிடபேசியின் தந்தை என்னும் பெருமையை அவர் பெற்றார். எனினும், 2008-ஆம் ஆண்டு மே 13-ஆம் நாள், பிரிட்டானின் டெய்லி மெயில் (Daily Mail) ஏட்டில் வெளியிட்ட தகவலில், நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் (Nathan Stubblefield) என்ற அமெரிக்கரே, செல்லிடபேசியைக் கண்டுபிடித்த முதலாவது நபர் என வெளியாகியுள்ளது. மேலும், Virgin செல்லிடபேசி வலைபின்னல் நிறுவனர் சர் ரிச்சார்டு பிரான்சனும், நாதனின் செல்லிட பேசி தந்தையாக கருதுகின்றார். நாதனின் கண்டுபிடிப்பு, உலகின் தொலைதொடர்பை மேம்படுத்தும் வழிகளில் ஒன்றாகும் என்று சார் ரிச்சார்டு பிரான்சன் கூறினார். மேலும், நாதனின் நினைவாக, சார் ரிச்சார்டு பிரான்சன் ஒரு சிறப்பு இணையப்பக்கத்தையே அமைத்து விட்டார். மார்ட்டீன் கூப்பர், நாதன் ஸ்டுபிர்ஃபீல்டு, யார் செல்லிட பேசி தந்தை?

நாதன் ஸ்டுபிர்ஃபீல்டு

உண்மையில், நடமாடும் தகவல் தொடர்புத் துறையில் ஈடுபடும் பணியாளர்களைத் தவிர, மார்ட்டீன்கூப்பர், நாதன் ஸ்டுபின்ஃபீல்டு பற்றி அறிந்தோர் மிகவும் குறைவாகவே உள்ளனர். ஆனால், அவர்கள் ஆற்றிய பங்கு, எடிசன் முதலியோருடன் ஒப்பிடுகையில், குறைவாக இல்லை. நாதன் ஸ்டுபின்ஃபீல்டு, தொலைதொடர்புத் துறை பணியாளர் அல்ல. அவர், அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் வாழ்ந்த விவசாயி ஆவார். உள்ளூர் சமூக நிறுவனம், குடிமக்களுடன் தொடர்புக் கொள்வதற்காக உதவி செய்வது என்பது, நாதன் ஸ்டுபின்ஃபீல்டு செல்லிடபேசியை ஆராய துவக்கிய நோக்கமாகும். 1902-ஆம் ஆண்டு, சளையாத முயற்சியுடன், முதலாவது செல்லிடபேசி வசதியை நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் வெற்றிகரமாக தயாரித்தார். 6 ஆண்டுகளுக்குப் பின்பு, செல்லிட பேசிக்கான அறிவுசார் காப்புரிமையை அவர் தடையின்றி பெற்று விட்டார். இருப்பினும், நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் தயாரித்த இந்தச் செல்லிட பேசியின் தோற்றம், குப்பை தொட்டியின் மூடி போன்று பெரியது. காந்த் புலத்தின் மூலம், ஒலி மற்றும் இசையை ஒரு செல்லிடபேசியிலிருந்து மற்றொரு செல்லிடபேசிக்கு அனுப்ப விட முடியும்.

மார்ட்டீன் கூப்பர்

செல்லிடபேசி தந்தை என கருதப்படும் மற்றொரு மார்டீன் கூப்பர், பொறியியல் தொழில் நுட்ப பணியாளராவர். 1954-ஆம் ஆண்டு முதல், அவர் மோட்டார்ரோலா நிறுவனத்தில் வேலை செய்ய துவக்கினார். அவர் நடமாடும் தொலைத் தொடர்பு வசதியை ஆராய பாடுபட்டு வந்தார். 1973-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற மன்ஹாட்டன் வணிகப் பிரதேசத்துக்கு அருகிலுள்ள சாலை ஒன்றில் மார்ட்டீன் கூப்பர் நின்று, Dyna TAC எனும் செல்லிடபேசியை அவர் பொது மக்களுக்கு எடுத்துக்காட்டினார். தற்போதைய செல்லிட பேசியுடன் ஒப்பிடுகையில், Dyna TAC எடை மிகவும் அதிகம். அதன் நீளம் 33சென்டி மீட்டர், எடை 794 கிராம். அதன் மூலம், ஒரு மணி நேரம் தொடர்புக் கொண்டு பேச முடியும். அதில் 30 தொலைபேசி எண்களை சேமிக்கப்பட முடியும். இந்தச் செல்லிடபேசிக்கு, பேசுதல் சேவை புரியம் தான். Dyna TAC, தற்போதைய செல்லிட பேசியின் மூலப்படிமமாகும். அது அதிக எடையுடன் இருந்த போதிலும், Dyna TAC உருவானது தான், கம்பியில்லா தொலைத் தொடர்பு என்ற புதிய காலத்தின் துவங்கியதை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

கடைசியில், மாட்டீன் கூப்பர், இந்த பெறுமையைப் பெற்றார். கூப்பர் தயாரித்த செல்லிட பேசி, தற்போது பொது மக்கள் பயன்படுத்துகின்ற செல்லிடபேசியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. மேலும், மாட்டீன் கூப்பர் இந்த செல்லிடபேசியை வெற்றிகரமாக சந்தையில் பரவியது. இதன் மூலம், தற்போது பொது மக்களின் வாழ்க்கை, மாபெரும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, செல்லிட பேசி தந்தை என்ற பெருமையை மாட்டீன் கூப்பர் பெற்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040