• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2013ஆம் ஆண்டில் உலகில் அறிவுச்சார் காப்புரிமை
  2014-04-17 10:34:31  cri எழுத்தின் அளவு:  A A A   

2013ஆம் ஆண்டில், உலகளவில் சர்வதேச அறிவுச்சார் காப்புரிமை பெற வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2இலட்சத்தைத் தாண்டியுள்ளது. விண்ணப்பங்களை முன்வைக்கும் நாடுகளில், அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய மூன்று நாடுகள், முதல் மூன்று இடங்களை வகிக்கிறன. உலக அறிவுச்சார் காப்புரிமை அமைப்பு மார்ச் 13-ஆம் நாள் ஜெனீவாவில் வெளியிட்ட புதிய அறிக்கை இதை தெரிவிக்கிறது.

2013ஆம் ஆண்டு, உலக அறிவுச்சார் காப்புரிமை அமைப்பு ஏற்றுக்கொண்ட அறிவுச்சார் காப்புரிமை விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை, 2இலட்சத்து 53ஆயிரம். 2012ஆம் ஆண்டில் இருந்த்தை விட இது, 5.1விழுக்காடு அதிகமாகும். அமெரிக்கா வழங்கிய அறிவுச்சார் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 57ஆயிரத்துக்கு மேலாகும். அமெரிக்காவை அடுத்து, ஜப்பான் சுமார் 44ஆயிரமாகும். சீனா 21ஆயிரத்து 600ஆகும். மேற்கூறிய மூன்று நாடுகள் வழங்கிய அறிவுச்சார் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, உலகளவில், 60விழுக்காடாகும். அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகள் செய்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையில், 2012ஆம் ஆண்டில் இருந்ததை விட பெரும் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்த்க்கது. இதுவே, சர்வதேச அறிவுச்சார் காப்புரிமைக்கான விண்ணப்ப எண்ணிக்கையை அதிகரித்த முக்கிய ஆற்றல். தவிர, முதல் பத்து நாடுகள் வரிசையில், ஜெர்மனி, தென் கொரியா, பிரான்ஸ், பிரிட்டான், ஸ்விசர்ட்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகள் இடம்பெறுகின்றன.

விண்ணப்பத்தை வழங்கும் தொழில் நிறுவனங்களின் நிலைமையையப் பார்த்தால், ஜப்பானிய Panasonic நிறுவனம் வழங்கிய விண்ணப்ப எண்ணிக்கை 2881, இதுவே மிக அதிகமானது. Panasonic நிறுவனத்தை அடுத்து, சீனாவின் ZTE நிறுவனம் மற்றும் ஹுவா வெய் நிறுவனம், 2வது மற்றும் 3வது இடங்களை வகிக்கின்றன. முதல் 50 தொழில் நிறுவனங்களின் தரவரிசையில், சீனாவின் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4, அமெரிக்க தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 15, ஜப்பானிய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக, 20ஆகும். இந்த தரவரிசையின் மூலம், ஜப்பானிய தொழில் நிறுவனங்களின் ஆய்வு மற்றும் வளர்ச்சி திறன் தலைசிறந்துள்ளது. சீனாவின் குறிப்பிட்ட சில தொழில் நிறுவனங்களின் திறன் முன்னணியில் இருக்கின்றது. ஆனால், பொதுவாக சீனாவின் தொழில் நிறுவனங்களின் ஆய்வு மற்றும் வளர்ச்சி திறன் குறைவு.

விண்ணப்பம் செய்த கல்வி நிறுவனங்களின் நிலைமையைப் பார்த்தால், முதல் 50 கல்வி நிறுவனங்களில், அமெரிக்கா வகிக்கின்ற இடங்களின் எண்ணிக்கை 31. முதல் 10 கல்வி நிறுவனங்களில், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், மசாசுசெட்ஸ் தொழிற்நுட்ப நிறுவனம், கொலம்பிய பல்கலைக்கழகம் உள்பட அமெரிக்காவின் 9 பல்கலைக்கழகங்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைத் தொடர்வது, தென் கொரியாவாகும். அதன் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 7. ஜப்பானிய கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 5 ஆகும். தவிர, பீகிங் பல்கலைக்கழகம், சின்ஷுவா பல்கலைக்கழகம் ஆகிய சீனாவின் இரு கல்வி நிறுவனங்கள் இத்தரவரிசையில் இடம்பெறுகின்றன.

இதனிடையில், விண்ணப்பம் வழங்கிய தொழில் நுட்பத்துடன் தொடர்புடைய துறைகளைப் பார்த்தால், மின் கருவிகள் மற்றும் இயந்திர துறை, எண்ணியல் தொடர்பியல் துறை, கணினித் தொழில் நுட்பத் துறை ஆகியவை பற்றிய அறிவுச்சார் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பெரும் பான்மையாக இருக்கின்றது. மின் கருவிகள் மற்றும் இயந்திர துறையில், Panasonic, Toyota, Robert Bosch, Siemens ஆகிய தொழில் நிறுவனங்கள் வழங்கிய விண்ணப்பங்களின் எண்ணிக்கைகள் முன்னணியில் இருக்கின்றன. கணினி துறையில், Intel, Micrsoft, QUALCOMM, NEC ஆகிய நான்கு தொழில் நிறுவனங்கள், விண்ணப்ப எண்ணிக்கைகளில், முதல் 4 இடங்களை வகிக்கின்றன. மேலும், எண்ணியல் தொடர்பியல் துறையில், சீனாவின் தொழில் நிறுவனம் ZTE, ஹுவாவெய், ஸ்வீடனின் எரிக்சன், அமெரிக்காவின் குயுல்காம் ஆகியவை, முக்கிய 4 தொழில் நிறுவனங்கள். தவிர, வாகன தயாரிப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் அறிவுசார் காப்புரிமை பெற செய்த விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை, பெருமளவில் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 2013ஆம் ஆண்டில், இத்துறையில் செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 4200க்கு மேலாகும். வாகனத் தயாரிப்புக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி முதலீட்டு அளவு விரைவாக அதிகரித்து வருவதை காட்டுகின்றது.

2013-ஆம் ஆண்டில் 31 தொழில் நுட்பத் துறைகள், சர்வதேச அறிவுச்சார் காப்புரிமை விண்ணப்பம் செய்துள்ளன. அவற்றில், முதல் பத்து இடங்களை வகிப்பவை அனைத்தும் தொழில் நிறுவனங்களே. இந்த நிலை, தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆய்வு மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040