• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சுவான் சோவில் பரவி வரும் நான் யீன் என்ற நாட்டுப்புற இசை
  2014-04-18 10:01:51  cri எழுத்தின் அளவு:  A A A   

நான் யீன் என்பது, நான் ச்சு (Nan Qu)அல்லது நான் யுயே(Nan Yue) எனவும் அழைக்கப்படுகின்றது. இது சீனாவின் பழமை வாய்ந்த இசை வகைகளில் ஒன்றாகும். டாங் வம்சக்காலத்தில் நான் யீன் இசை தோன்றியது. சுங் மற்றும் யுவான் வம்சங்களில், நான் யீன் இசை படிப்படியாக வளர்ந்தது. மிங் மற்றும் சிங் வம்சங்கள், நான் யீன் இசை வளர்ச்சியின் பொற்காலமாகும். டாங் வம்சத்தின் செழுமைக்காலம் தொட்டு, மஞ்சள் ஆற்றின் மத்தியப் பகுதியிலிருந்து கீழ் பகுதி வரையான பிரதேசங்களின் இனிமையான இசைக்களின் தலைசிறந்த அம்சத்தையும், யுவான் ச்சு உள்ளிட்ட இசைக்களின் தனிச்சிறப்புகளையும் நான் யீன் நாட்டுப்புற இசை சேர்த்தது. பின்னர், இந்த இசை வகை, ஃப்சியாங் பிரதேசத்தின் தென் பகுதியில் பரவி வந்த நாட்டுப்புற இசையுடன் ஒன்றிணைந்தது. நான் யீன் இசை கேட்பதற்கு மிகவும் இனிமையானதாக உள்ளது.

கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, நான் யீன் இசை, ச்சுவான் சோ உள்ளிட்ட ஃப்சியாங்கின் தென் பகுதியில் பரவி வந்துள்ளது. ச்சுவான் சோ மக்களின் குடிபெயர்வுடன், நான் யீன் இசை, தைவான், ஹாங்காங், மக்கெள, தென் கிழக்காசிய நாடுகள் ஆகியவற்றில் பரவி வருகிறது. 2009ஆம் ஆண்டு, யுனேஸ்கோ அமைப்பு, நான் யீன் இசையை, "மனித குலத்தின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில்" சேர்த்துள்ளது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040