• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சுவான் சோவில் பரவி வரும் நான் யீன் என்ற நாட்டுப்புற இசை
  2014-04-18 10:01:51  cri எழுத்தின் அளவு:  A A A   

ச்சுவான் சோ நகரின் நான் யீன் கலை ஆய்வகத்தின் தலைவர் வூ சான் சானின் அறிமுகத்தின்படி, 2009ஆம் ஆண்டு நான் யீன் "மனித குலத்தின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில்" சேர விண்ணப்பித்தபோது, ச்சுவான் சோ நகரின் தொடர்புடைய வாரியம் 789 வகைகளைச் சேர்ந்த 1292 நான் யீன் இசை புத்தகங்களையும், சுமார் 2000 நான் யீன் இசைக் குழுக்கள் மற்றும் கலைஞர்களின் தகவல் ஆவணங்களையும் சேகரித்திருந்தது. தற்போது இத்தரவுகள் கணிணியில் பதிய செய்து, எண்ணியல் முறையாக்கியுள்ளன.

நான் யீன், "மனித குலத்தின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ பட்டியலில்" சேர்க்கப்பட்ட பின், சீனாவிலும் வெளிநாடுகளிலும் நான் யீன் இசைப் பாதுகாப்பு மற்றும் கையேற்றலில் பங்கெடுக்கும் மக்கள் மேலும் அதிகரித்துள்ளனர். "நான் யீன் மீதான ஆய்வு, பாதுகாப்பு, கையேற்றல் ஏன் புத்தாக்கம், இயல்பாகியுள்ளன" என்று ஃபுசியான் ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வாங் யாவ் குவாங் கருத்துத் தெரிவித்தார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040