• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மலேசிய பயணி விமான விபத்துக்கு ஐ.நா பாதுகாப்பவை வேண்டுகோள்
  2014-07-22 09:24:28  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நா பாதுகாப்பவை 21ஆம் நாள் நிறைவேற்றிய தீர்மானத்தில் மலேசிய எம்எச் 17 பயணி விமானம் விழுந்து நொறுங்கியதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இச்சம்பவத்துக்கான சர்வதேச ஆய்வுடன் போதிய அளவில் ஒத்துழைக்குமாறு தொடர்புடைய தரப்புகளுக்கு ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச பயணியர் விமானப் போக்குவரத்து அமைப்பு, சர்வதேசப் பயணியர் விமானத் துறையில் தொடர்புடைய விவகாரங்களைக் கையாளும் ஐ.நாவின் சிறப்பு நிறுவனமாகும். அது சர்வதேச புலனாய்வில் முக்கிய பங்கு ஆற்ற வேண்டுமென ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி லியு ஜெய் யி 21ஆம் நாள் கூறினார்.

வெனிசூலாவில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்குடன் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகின்ற சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அவ்விமான விபத்து பற்றி ஐ.நா நிறைவேற்றிய தீர்மானத்துக்கு அதே நாள் வரவேற்பு தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040