• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர் கியூபாவின் புரட்சித் தலைவரை அன்புடன் பார்வையிட்டார்
  2014-07-23 09:49:37  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங் ஜூலை 22ஆம் நாள் ஹவானாவில் கியூபாவின் புரட்சித் தலைவர் ஃபிடேல் காஸ்ட்ரோவை அன்புடன் சந்தித்தார்.

திரு ஃபிடேலும் சீன மூத்த தலைவர்களும் கூட்டாக உருவாக்கியுள்ள சீன-கியூப நட்புறவைக் கையேற்றி வெளிக்கொணர்வது எனது கியூபப் பயணத்தின் நோக்கமாகும் என்று ஷீ ச்சின் பிங் வலியுறுத்தினார். லத்தின் அமெரிக்க பயணத்தின்போது, பிரிக்ஸ் நாடுகள் குழுவின் உச்சி மாநாடு மற்றும் சீன-லத்தின் அமெரிக்க தலைவர்கள் சந்திப்பின் நிலைமை பற்றியும் ஃபிடேல் காஸ்ட்ரோவிடம் ஷீ ச்சின் பிங் அறிமுகப்படுத்தினார்.

சீனாவுடனான நட்புப்பூர்வ பரிமாற்றங்களை நினைவுக் கூர்வதாகவும், சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங் மற்றும் கியூபாத் தலைவர்களின் தலைமையில், கியூப-சீன உறவின் வளர்ச்சியில் மேலும் சிறந்த சாதனைகள் பெறப்படும் என்றும் ஃபிடேல் காஸ்ட்ரோ நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040