• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா-ஆசியா ஐரோப்பியா பொருட்காட்சி பற்றிய முகவுரை
  2014-08-27 16:32:02  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போதைய சீனா-ஆசியா ஐரோப்பிய பொருட்காட்சி, முந்தைய உருமுச்சி வெளிநாட்டுப் பொருளாதாரமற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தை வளர்ந்து உருவாக்கியது ஆகும். முதலாவது பொருட்காட்சி, 2011ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் தொடக்கம் 5ஆம் நாள் வரை சீனாவின் சின்ஜியாங் சர்வதேசக் கண்காட்சி மையத்தில் நடைபெற்றது. இது வரை அது மூன்று முறை வெற்றிகரமாக நடைபெற்றது. உலகின் 70க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்கள், 20 சர்வதேச அமைப்புகள் ஆகியவை இதில் பங்கேற்றுள்ளன.

4-வது சீனா-ஆசியா ஐரோப்பிய பொருட்காட்சி, இவ்வாண்டு செப்டம்பர் முதல் நாள் தொடங்கி 6ஆம் நாள் வரை சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரசேத்தின் தலைநகர் உருமுச்சி மாநகரில் நடைபெறவுள்ளது. பட்டுப் பாதைப் பொருளாதாரக் கட்டுமானம் என்பது, நடப்பு பொருட்காட்சியின் தலைப்பு. அறிவியல், தொழில் நுட்பம், போக்குவரத்து, ஊடகம், கல்வி உள்ளிட்ட துறைகளில் அமைச்சர் நிலை கருத்தரங்குகளும் நிகழ்வுகளும் நடத்தப்படும்.

மேலும், துருக்கி, மலேசியா, இந்தியா, ஜெர்மனி முதலிய நாடுகள் பொருட்காட்சியின்போது முதலீடு மற்றும் வர்த்த்க முன்னேற்ற நிகழ்ச்சிகளை நடத்தும் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த பொருட்காட்சியின் அதிகார இணையதளம்: http://www.caeexpo.org/

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040