• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அண்டை நாடுகளின் ஆக்கப்பூர்வமான பங்கெடுப்பு
  2014-08-31 17:44:19  cri எழுத்தின் அளவு:  A A A   
நாளை தொடங்கவுள்ள 4வது சீன-ஆசிய ஐரோப்பிய பொருட்காட்சியில், 60 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் பங்கெடுக்கும். இந்தப் பொருட்காட்சி, சின்சியாங்கின் பிரதேச பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் புதிய உந்து ஆற்றலாக மாறும்.

ஒத்துழைப்பைத் திறந்து, பட்டுப்பாதைப் பொருளாதார பிரதேசத்தைக் கூட்டாக கட்டுவது என்பது, நடப்பு சீன-ஆசிய ஐரோப்பிய பொருட்காட்சியின் தலைப்பாகும் என்று இப்பொருட்காட்சி செயலாளர் அலுவலகத்தின் துணை தலைமை செயலாளர் ச்சீ வேன்சியே அறிமுகப்படுத்தினார்.

சின்சியாங் சர்வதேச பொருட்காட்சி பணியகத்தின் இயக்குந்ர் லீ சீங்யுவான் பேசுகையில், நடப்புப் பொருட்காட்சியில் பல்வேறு நாடுகளின் விருந்தினர்கள் பட்டுப்பாதை பொருளாதார பிரதேசத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது பற்றி பெருமளவில் கருத்துக்களைப் பரிமாறி, ஒத்தக் கருத்துக்கு வர முயற்சி செய்வார்கள் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040