2014ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் எரியாற்றல் துறை அமைச்சர்கள் கூட்டம் செப்டெம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இவ்வமைப்பின் 21 உறுப்பு நாடுகளின் எரியாற்றல் துறை அமைச்சர்களும், தொடர்புடைய சர்வதேச அமைப்புகளின் அலுவலர்களும் ஒன்றுகூடி, ஆசிய-பசிபிக் பிரதேச எரியாற்றலின் தொடரவல்ல வளர்ச்சி குறித்து விவாதம் நடத்துகின்றனர்.
ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் எரியாற்றல் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி, எரியாற்றலின் தொடரவல்ல வளர்ச்சியை மேம்படுத்தி, எரியாற்றலின் பாதுகாப்பை பேணிக்காப்பது என்பது நடப்பு கூட்டத்தின் நோக்கமாகும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனத் துணைத் தலைமை அமைச்சருமான ச்சாங் காவ்லீ இக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.