• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் வளர்ந்து கொண்டிருக்கின்ற சீனத் தொழில் நிறுவனங்கள்
  2014-09-16 18:57:43  cri எழுத்தின் அளவு:  A A A   

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது சரக்கு கப்பல் துறைமுகத்தை விட்டு புறப்படும் சத்தம். தற்போது தினமும் அதிகரிக்கும் சரக்கு கப்பல்கள், சீன மற்றும் இந்திய தொழில் முனைவோரின் கனவை ஏற்றிச்சென்று வருகின்றன. பல தொழில் நிறுவனங்கள் வணிகம் செய்யும் போது கப்பல் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கும். இது சில சீனத் தொழில் முனைவோருக்கு வேலை இலக்கை வழங்கியுள்ளது. லீ வென்ஹோவ் என்பவர் 1998ஆம் ஆண்டு சன் ஹுய் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் துவக்கினார். சீன-இந்தியப் போக்குவரத்து நெறி, இந்நிறுவனத்தின் மிக முக்கிய நெறியாகும். இந்தியாவில் தளவாட வளாகத்தையும், ஏற்றியிறக்கலுக்கான சிறப்பு இருப்புப் பாதையையும் கொண்டிருக்கும் முதலாவது சீனத் தொழில் நிறுவனமாக சன் ஹுய் நிறுவனம் இருக்கிறது. அதனால் இந்தியத் துறைமுகத்தில் அதற்குச் சிறப்பான போட்டியாற்றல் உள்ளது.

இந்தியப் போக்குவரத்து சந்தை நிலை படி லீ வென்ஹோவ் வணிக முறைமையை மேம்படுத்தி வருவதால், இந்தியாவிலுள்ள இரண்டு துறைமுகங்களிலிருந்து சன் ஹுய் நிறுவனம் நிறைய முன்பதிவு படிவங்களைப் பெற்றுள்ளது. மேலும் அவர் இந்தியாவில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி கூறியதாவது

"வெளிநாட்டு நிறுவனமாக, நாங்கள் இந்தியாவுக்கு முதலீட்டையும் தொழில் நுட்பங்களையும் கொண்டு வர வேண்டும். உயர் நிலை நிர்வாகிகளும், தேர்ச்சி பெற்ற தொழில் நுட்பப் பணியாளர்களும் சீனாவிலிருந்து அங்கு அனுப்பப்படலாம். ஆனால் நடு நிலை மற்றும் சாதாரண பணியாளர்களாக உள்ளூர் மக்களை நியமிக்க வேண்டும். இப்படி செய்தால், உள்ளூர் வேலை வாய்ப்பை அதிகரித்து, உள்ளூர் பொருளாதார செழுமையைத் தூண்டும். நாங்கள் வெளிநாட்டில் நீண்டகாலமாக வாழ்கிறோம். உள்ளூர் சமூகத்துக்கு நலன் விளைவிக்க வேண்டும்."என்று அவர் தெரிவித்தார்.

சன் ஹுய் கப்பல் போக்குவரத்து நிறுவனம் போல் வு லிங் வாகனத் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் சிறப்புப் பாதையிலும் நடை போட்டு வருகிறது. தற்சார்ப்பு அறிவுசார் சொத்துரிமையுடைய திட்டப்பணி அமைப்பு முறையை வு லிங் வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஆராய்ந்துள்ளது. இதற்கிடையில் இந்திய நுகர்வோரின் தேவைக்கேற்ப, வலது பக்க ஓட்டுதல் முறைமையை அது வளர்த்துள்ளது. இந்நிறுவனத்தின் பொது தொடர்புத் துறை மேலாளர் You Xue Mei அம்மையார் கூறியதாவது

"தற்போது வு லிங் வாகனத் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் சீராக இயங்கி, உள்ளூர் நுகர்வோரால் வரவேற்கப்படுகிறது. அது உற்பத்தி செய்த வாகனத்தில் இந்தியச் சந்தையில் ச்செவ்ரொலெத் இன்ஜொய் எனும் சின்னம் பொருத்தப்பட்டது. மேலும் 2013-2014ஆம் ஆண்டு MPV அதாவது பல்செயல் பயணி வாகனத்துக்கான விருதை அது பெற்றுள்ளது. இந்த MPV தரவரிசையில் வு லிங் வாகனம் இரண்டாம் இடத்தில் வகிக்கிறது."என்றார் அவர்.

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முதலீட்டை, இந்தியா ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் சில சீனத் தொழில் நிறுவனங்கள் தீவிரப் போட்டியை எதிர்நோக்குகின்றன. கோஃபாங்யூஹோங் எனும் ஒரு நீர்த்தடுப்புத் தொழில் நிறுவனத்தின் துணைத் தலைமை பொறியியலாளர் யாங் யுங் கூறுகையில், இந்திய நீர்த்தடுப்புச் சந்தையின் வரையறை, சீன வரையறையுடன் ஒப்பிட்டால், அதிக வித்தியாசம் உள்ளது. இதற்கிடையில் வெளிநாட்டு நீர்த்தடுப்பு மூலப் பொருட்களிடம் 22 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடு வரை இந்திய அரசு வரி வசூலிக்கிறது. இருந்த போதிலும், கோஃபாங்யூஹோங் நிறுவனம் இன்னும் நம்பிக்கையுடன் புதிய நெடுநோக்கு திட்டத்தை வகுத்து குறைந்த விலையில் தரமுள்ள உற்பத்திப் பொருட்களை விற்கப் போகும் என்று யாங் யுங் தெரிவித்தார்.

சீனத் தொழில் முனைவோர் இந்தியச் சந்தை மீது எதிர்பார்ப்பைக் கொண்டு மட்டுமல்லாமல், இந்திய வணிகர்களும் சீன நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதில் அதிக ஆசை கொண்டிருக்கின்றனர். மேகலா எனும் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பரத் கூறியதாவது

அண்மையில் இந்தியாவுக்கான சீனத் தூதரகம் நடத்திய கூட்டத்தில், இந்தியாவில் சீனத் தொழில் மண்டலத்தைக் கட்டியமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. சீன அரசு தொழில் நிறுவனங்கள் இந்தியச் சந்தைக்கு முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட்டன. எதிர்காலத்தில் இயந்திரத் தயாரிப்புத் துறை, புதிதாக வளரும் அறிவியல் தொழில் நுட்பத் துறை உட்பட பல துறைகளில் இவ்விரு நாடுகள் மேலதிக ஒத்துழைப்புகளை உருவாக்குவது உறுதி.

சரி இதுடன் ஒரு வாரப் பொருளாதார நிகழ்ச்சி நிறைவடைகிறது. நீங்கள் சீனத் தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி இருக்கிறீர்களா?எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் இலக்கியா. அடுத்த வாரம் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040