• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புது தில்லியில் ஷி ச்சின்பிங்கின் சொற்பொழிவு (படத்தொகுப்பு)
  2014-09-19 00:19:58  cri எழுத்தின் அளவு:  A A A   

 

புது தில்லி நேரப்படி மாலை 4.30மணி அளவில், இந்திய குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரியுடன் ஷி ச்சின்பிங் சொற்பொழிவு ஆற்றும் மண்டபத்தில் நுழைந்திருந்தார்.

 

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ள அவர், இந்திய பொது மக்கள் படைத்துள்ள மாபெரும் வளர்ச்சி சாதனைகளை நேரில் கண்டுள்ளார் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இரு தரப்புறவு, பொது அக்கறை வாய்ந்த முக்கிய விவகாரங்கள் ஆகியவை பற்றி ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட நிலையில், அதிக பொது கருத்துக்கள் உருவாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ஷிச்சின்பிங் கூறியதாவது

 

இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் உள்ளடக்கங்களை அதிகரிக்கவும், மேலும் நெருக்கமான வளர்ச்சிக் கூட்டாளியுறவை அமைக்கவும் நாம் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றோம். சீனாவின் முன்னாள் தலைவர் தேங் சியோபிங் கூறியதைப்போலவே, சீனாவும் இந்தியாவும் அனைத்தும் வளர்ந்த பிறகு தான், ஆசிய நூற்றாண்டு என்ற காலம் உண்மையாக ரும். இந்தியாவும் சீனாவும் இணைந்து நடந்துச்செல்வது ஆசியாவுக்கும் உலகிற்கும் ஒரு பெரிய நிகழ்வு ஆனது, திரு ஜவஹர்லால் நேருவின் கருத்து. ஆசியாவில் மிகப் பெரிய நாடுகளான சீனாவும் இந்தியாவும், ஆசியாவின் அமைதி, நிதானம், செழுமை, மறுமலர்ச்சி ஆகியவற்றில் வரலாற்றுப் பொறுப்புகளையும் இன்றைய கடமைகளையும்  நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

 

சர்வதேச ஒழுங்குமுறையில் முன்பு காணாத அளவுக்கு ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனிடையில், ஆசியாவின் தகுநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதே ஒரு முக்கிய வளர்ச்சி திசை.  உலக பலதுருவமயமாகும் போக்கில் இரண்டு முக்கிய சக்திகளாக விளங்கும் சீனாவும் இந்தியாவும்,  ஆசிய மற்றும் உலக பொருளாதார அதிகரிப்பை தூண்டும் முக்கிய சக்திகளாகும்.  எமது நாடுகள் கால ஓட்டத்தின் முன்னணியில் மீண்டும் நிற்கின்றன. இந்நிலையில், சீன-இந்திய உறவு, இரு தரப்புறவு என்ற நிலையை பெரிதும் தாண்டியுள்ளது. இவ்வுறவு பரந்த பிரதேச மற்றும் உலக செல்வாக்கு வாய்ந்தது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, ஆசியா, மற்றும் உலகிற்கு நன்மை பயக்கும் என்று ஷிச்சின்பிங் சொற்பொழிவில் சுட்டிக்காட்டினார்.

புதிய காலத்தில், இரு நாடுகளும் மேலும் நெருக்கமான வளர்ச்சி கூட்டாளியாகவும்,  அதிகரிப்பை தூண்டும் ஒத்துழைப்புக் கூட்டாளியாகவும், நெடுநோக்கு ஒருங்கிணைந்த உலகளாவிய கூட்டாளியாகவும் அமைய வேண்டும் என்று ஷிச்சின்பிங் முன்தொழிந்தார். இந்நிலையில், முதலீடு மற்றும் நாணயத் துறையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், இளைஞர்கள், கல்வி, சுற்றுலா, மதம், ஊடகம், வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, போன்ற துறைகளில் பரிமாற்றத்தை விரிவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

சீனா, இந்தியா நாடுகளுக்கு 250 கோடிக்கும் மேலான மக்கள் தொகை உள்ளது. சீனாவும் இந்தியாவும் ஒரே ஒலியை வெளிக்கொணர்ந்தால், முழு உலகம் அதைக் கேட்கும். சீனாவும் இந்தியாவும் ஒத்துழைத்தால், முழு உலகமும் கவனம் செலுத்தும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

 

நம்பிக்கை, எண்ணற்ற வாய்ப்புகள் நிறைந்திருக்கும் துணைக் கண்டமான தெற்காசியா, ஆசியா மற்றும் உலகப் பொருளாதார அதிகரிப்பின் புதிய தோற்றம். அமைதி, நிதானம், வளர்ச்சி, செழுமை ஆகியவற்றை கொண்ட தெற்காசியா, இப்பிரதேசத்திலுள்ள நாடுகள் மற்றும் மக்களின் நலன்களுக்கு ஏற்றதாக அமையும். சீனாவின் நலன்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது. தெற்காசியாவின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து பொருளாதார வர்த்தகம், மக்கள் பரிமாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது என்று ஷிச்சின்பிங் கூறியுள்ளார்.

 

தெற்காசியாவை பொறுத்த வரை, சீனா, மிகப் பெரிய அண்டை நாடு. அதேவேளையில், இந்தியா, தெற்காசியாவில் மிகப் பெரிய நாடு தான். இந்நிலையில், சீனாவும் இந்தியாவும் இணைந்து தெற்காசியாவின் வளர்ச்சிக்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.

 


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040