• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷீ ச்சின்பிங்கின் இந்தியப் பயணம் மீது இந்தியச் சமூக துறையினரின் பாராட்டு
  2014-09-19 16:38:24  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங் 18ஆம் நாள் "கைகோர்த்து தேசத்தின் மறுமலர்ச்சி கனவைத் தேடுவதென்ற" தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். ஆசியாவில் மிக பெரிய இரு நாடுகளாக, சீனாவும் இந்தியாவும் ஆசிய அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாத்து, ஆசியாவின் செழுமை மற்றும் மறுமலர்ச்சியை நனவாக்குவதில் வரலாற்று பொறுப்பையும், யுகத்தின் கடமையையும் ஏற்கின்றன என்றும், சீன-இந்திய உறவு, பரந்துபட்ட பிரதேச மற்றும் உலகச் செல்வாக்கு கொண்டுள்ளது என்றும் ஷீ ச்சின்பிங் சொற்பொழிவில் தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கின் இந்தியப் பயணத்தில், சீன, இந்திய தலைவர்கள் இரு தரப்புறவு பற்றியும், பொது அக்கறை கொண்ட முக்கிய பிரச்சினைகள் பற்றியும் பன்முகங்களிலும் ஆழமாகவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, பல பொது கருத்துக்கு வந்துள்ளனர். இது பற்றி இந்திய தொழில் நுட்ப நிர்வாகக் கல்லூரியின் பேராசிரியரும், சர்வதேச உறவுக் கல்லூரியின் துணை தலைவருமான ஜெயந்தி ரன்ஜன் எமது செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில் கூறியதாவது:

"அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கின் பயணம், சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தியா, சீனாவின் ஒத்துழைப்புக் கூட்டாளியாக மாற வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இரு நாட்டு அரசுகள் கையோடு கைகோர்த்துள்ளதை மதிழ்ச்சியுடன் கண்டுள்ளோம். உடன்படிக்கைகளை உருவாக்குவதைத் தவிர, இரு நாடுகளும் உண்மையான ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம். இதற்கிடையில், இரு நாட்டு மக்கள் பரிமாற்றம் செய்து, பொருளாதாரம் தொடர்பான திட்டப்பணிகளில் கூட்டாக பங்கெடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார் அவர்.

அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கின் பயணம் பற்றி இந்திய தொழில் நுட்ப நிர்வாகக் கல்லூரியின் தலைவர் N.L.அஹுஜா கூறியதாவது:

"எதிரிகளுக்குப் பதிலாக, சீனாவும் இந்தியாவும் ஒத்துழைப்புக் கூட்டாளிகளாகும். இவ்விரு நாடுகளும் கையோடு கைகோர்த்து ஒத்துழைத்தால், உலகிற்கு மேலதிக வளம் மற்றும் அமைதியை வழங்கி, இரு நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும். இதற்கிடையில், இரு நாட்டு ஒத்துழைப்பு, உலகளவில் மேலதிக பங்காற்ற முடியும்" என்றார் அவர்.

அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கின் இந்தியப் பயணம் குறித்து, இந்திய தொழில் நுட்பம் மற்றும் நிர்வாகக் கல்லூரியின் முனைவர் பட்டதாரி ஆசிரியர் பிபேக் பானர்ஜீ கூறியதாவது:

"இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகளாகும். இவ்விரு நாடுகளும் நீண்டக்கால வரலாறுடையவை. பண்பாட்டுத் துறையில் இரு நாடுகளும் பரிமாற்றம் மேற்கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளும் சிறந்த ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டுள்ளன" என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040