சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்ட "உலகப் பொருளாதார முன்னாய்வு அறிக்கையின்"படி, இவ்வாண்டும் அடுத்த ஆண்டும் சீனப் பொருளாதாரம் முறையே 7.4 விழுக்காடும் 7.1 விழுக்காடும் அதிகரித்து வரும். சீனப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பது, சீனப் பொருளாதாரத்தின் நிதானமான வளர்ச்சிக்குத் துணை புரியும் என்று ச்சு மின் சுட்டிக்காட்டினார்.
சீன அரசு மேற்கொண்டுள்ள ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்புச் சரிப்படுத்தலில் குறிப்பிட்ட பயன்கள் பெறப்பட்டுள்ளன. சிறிய ஊக்க முறை மூலம், இருப்புப்பாதை, புதிய உற்பத்தி பொருட்கள், பொது வசதிகள் ஆகியவற்றின் வளர்ச்சியை சீன அரசு ஆதரித்து, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இவ்வாண்டின் துவக்கம் முதல் இது வரை, சீனாவில் ஒரு கோடியே 20 லட்சம் மக்களுக்குப் புதிதாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சீனப் பொருளாதாரத்தில் இவ்வாண்டு முதல், தயாரிப்புத் தொழிலை விட, சேவைத் தொழில் வகிக்கும் விதிகம் அதிகம். ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பு சீர்படுத்தலில் பெற்றுள்ள நல்ல பயன் இதுவாகும் என்று ச்சு மின் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், வீட்டு நில உடைமைத் துறையினை சீர்படுத்துதல் என்பது, தற்போது சீனா எதிர்நோக்கும் முக்கிய அபாயமாகும் என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"வீட்டு நில உடைமைத் துறை சீ்ர்படுத்துதல் என்பது, பெரும் கடமையாகும். அது தற்போது மிக முக்கிய அபாயமும் ஆகும். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வீட்டு நில உடைமை வகிக்கும் விகிதம் அதிகம். வீட்டு நில உடைமை தொடர்பான தொழில் சங்கிலி நீளமானது. கடன், வினியோகம் மற்றும் அதற்கானத் தேவை பல துறைகளுடன் தொடர்புடையவை. வீட்டு நில உடைமையினைச் சீ்ர்படுத்துதல் என்பது மேலும் இன்னல்மிக்கது" என்றார் அவர்.
சீனப் பொருளாதாரத்தின் நிதானமான அதிகரிப்பை இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் பாராட்டினர். ஏனெனில், சீனா, உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசு ஆகும். சீனப் பொருளாதாரத்தின் நிதானமான அதிகரிப்பு, உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று ச்சு மின் தெரிவித்தார்.