• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுல்தான் ஜோஹர் கோப்பை
  2014-10-20 10:01:39  cri எழுத்தின் அளவு:  A A A   
சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை வீழ்த்திய இந்திய அணி, சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
மலேசியாவின் ஜோஹர் பஹ்ருவில் 21வயதுக்கு உட்பட்டோருக்கான ஹாக்கி தொடர் நடைபெற்றது. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற இப்போட்டியில், முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியாவும், பிரிட்டனும் ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் மோதின.
லீக் சுற்றில் இந்தியாவை வீழ்த்திய பிரிட்டன் அணி, மிகவும் கவனமாக ஆடியது. இந்திய வீரர்களும் சுதாரிப்பாக ஆடினர். 45ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைக் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கோலாக மாற்ற, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 55ஆவது நிமிடத்தில் பிரிட்டனுக்கு ஒரு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. இதை சாமுவேல் ஃபிரெஞ்ச் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது.
62ஆவது நிமிடத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்திய கோல் கீப்பர் அபினவ் பாண்டேவுக்கு பச்சை அட்டை காண்பிக்கப்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக சுபோத் திர்கே கீப்பராக செயல்பட்டார். ஆட்டம் முடிய 45 வினாடிகள் இருந்தபோது இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை ஹர்மன்ப்ரீத் சிங் வீணடிக்காமல் கோல் அடிக்க, இந்தியா 2-1 என்னும் நிலையில் வெற்றி பெற்றது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040