தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பெரு நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் பருரோ என்று நகரத்தில் நகராட்சித் தலைவர் தேர்தல் அக்டோபர் திங்கள் நடைபெற்றது. வில்பர்ட் மதினா, ஜோஸ் கர்னேஜோ கார்பியோ இருவரும் இத்தேர்தலில் போட்டியிட்டனர். அக்டோபர் 5-ஆம் நாள் வெளியான தேர்தலின் முடிவின்படி, இருவருக்கும் தலா 236 வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த சமமான முடிவினால், தேர்தல் முடிவை அறிவிப்பதில் சிக்கல் எழுந்தது.
இறுதியில், நாணயத்தை வீசி எறிந்து, தேர்தலின் முடிவை அறிவிக்க, உள்ளூர் அதிகாரி அனுமதித்தார். இத்தகைய சோதனையில் வில்பர்ட் மேதினா, வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.. இறுதியில், அவர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பெரு நாட்டின் நடப்பு சட்டவிதிகளின்படி, நாணயத்தை வீசி எறிந்து தேர்தலின் முடிவை அறிவிக்க அனுமதிக்கப்படுகிறது என தெரிகிறது