எபெக் அமைப்பின் மூலம், கடந்த 20 ஆண்டுகளில் ஆசிய-பசிபிக் பிரதேசம் விரைவான பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது, சீனாவின் வளர்ச்சி மற்றும் செல்வாக்கின் அதிகரிப்புடன், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இப்பிரதேசத்திலான போட்டி தீவிரமாகி வருகிறது. இப்பிரதேசத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு ஏற்கும் புதிய ஒழுங்கு நிறுவப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் தலைமையமைச்சரும் எபெக் அமைப்பைத் துவங்கியவருமான பாப் ஹௌக் 7ஆம் நாள் தெரிவித்தார்.
எபெக் உச்சிமாநாட்டின் சீன நாள் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய போது அவர் இவ்வாறு கூறினார்.