சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, 8ஆம் நாள் எபெக்கின் 26-வது அமைச்சர் நிலை கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன-ஜப்பானிய தலைவர்கள் சந்திப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இரு நாட்டுறவின் வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் நேற்று இருதரப்பும், நான்கு ஒத்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளன. ஜப்பான் தரப்பு இந்த ஒத்தக்கருத்துக்களை முறைப்படி பின்பற்றி, இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்குத் தேவையான சீரான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று வாங்யீ விருப்பம் தெரிவித்தார்.