சீன அரசவை உறுப்பினர் யாங் ச்சியெச்சு ஜப்பானிய தேசிய பாதுகாப்பு பணியகத்தின் தலைவர் ஷொடாரொ யாச்சியுடன் 7ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-ஜப்பானிய உறவை மேம்படுத்துவது குறித்த 4 பொது கருத்துக்களை இருவரும் ஏற்றுக்கொண்டனர். சர்வதேச சமூகம் இதை கூர்மையாகக் கவனித்துப் பாராட்டியுள்ளது.
இரு தரப்புறவின் தணிவுக்கு, இது ஒரு முக்கிய தொடக்கமாகும். பேச்சுவார்த்தை மூலம் நிலைமை மோசமாகுவதைத் தடுத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் முறைமையை நிறுவுவது, ஒரு ஆக்கப்பூர்வ அறிகுறியாக கருதப்படுகிறது என்று இந்திய ஆய்வாளர் ஜொப்ரா கருத்து தெரிவித்தார்.
இது, தற்போதைய இரு நாட்டுறவின் மேம்பாட்டுக்குத் துணை புரியும். சின்சொ அபே அரசு, உறுதிமொழியைக் கடைபிடித்து 4 பொது கருத்துக்களின்படியே செயல்படுவது, இரு நாட்டுறவின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று ஜப்பானிய-சீன சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷின்யிச்சிரொ ஷிரானிஷி கூறினார்.
சீன-ஜப்பான் இரு நாட்டுறவை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள இந்த 4 பொது கருத்துக்கள் வடகிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசியாவில் ஆக்கப்பூர்வமான செல்வாக்கை ஏற்படுத்தும் என்று ரஷிய அறிவியல் கழகத்தின் நிபுணர் வலெரி கிஸ்தனொவ் கூறினார்.