சீன-வாங்காளதேச நட்புறவு
2014-11-08 18:57:08 cri எழுத்தின் அளவு: A A A
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் வாங்காளதேச அரசுத் தலைவர் அப்துல் ஹமித்தை சந்தித்துரையாடினார்.
சீனாவின் நலனுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் வங்காளதேசம் வழங்கி வருகின்ற ஆதரவுக்கு ஷி ச்சின்பீங் நன்றி தெரிவித்தார். அடுத்த ஆண்டு இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 40ஆம் ஆண்டாகும். இவ்வாய்ப்பை பயன்படுத்தி, வர்த்தகம், வேளாண்மை, அடிப்படை வசதிகள் முதலியவற்றில் இரு நாடுகளும் வலுப்படுத்தி பாரம்பரிய நட்புறவை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
பட்டுப் பாதை பொருளாதார மண்டலத்தின் கட்டுமானமும், சீன-இந்திய-வங்காளதேச-மியான்மார் பொருளாதார இடைவழியின் கட்டுமானமும், வாங்காளதேசத்தின் வளர்ச்சிக்கு வாய்ப்புகளை கொண்டு வரும் என்று ஹமித் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய