ஆசிய-பசிபிக் பொருளாதார அமைப்பின் 26-வது அமைச்சர் நிலை கூட்டம் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. இக்கூட்டத்தின் கூட்டுத் தலைவரான சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயும், வணிக துறை அமைச்சர் கெள ஹுசெங்கும் தனித்தனியாக நிறைவுரை வழங்கி, செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்து கூட்டத்தின் சாதனையை விளக்கினர்.
எதிர்காலத்தின் ஆசிய-பசிபிக் கூட்டாளி உறவைக் கூட்டாக உருவாக்கும் என்ற தலைப்பையும் பல்வேறு பிரச்சினைகளையும் நடப்புக் கூட்டம் ஆழமாக விவாதித்து முக்கிய பொது கருத்துக்களை உருவாக்கியுள்ளது என்று வாங்யீ தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகளில் எபெக் பெற்றுள்ள சாதனைகளைப் பல்வேறு தரப்புகள் வெகுவாக பாராட்டின. தற்போதைய காலத்தில், ஆசிய-பசிபிக் பொருளாதார அமைப்பு, புதிய வாய்ப்பையும் அறைகூவலையும் எதிர்நோக்கி, பிரதேசப்பொருளாதார ஒத்துழைப்பையும் பொருளாதார அதிகரிப்பையும் விரைவுபடுத்துவதில் மேலதிகமாகப் பங்காற்ற வேண்டும் என்று கருதப்படுகிறது.
மேலும், இக்கூட்டத்தில் ஆறு பொதுக் கருத்துக்களை உள்ளடக்கிய கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.