எபெக் ஊழல் எதிர்ப்பு ஒத்துழைப்பு இணையம் எனும் அமைப்பு, அண்மையில் நிறுவப்பட்டது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்டுப்பாட்டு பரிசோதனைக் கமிட்டிக் கண்காணிப்பு அமைச்சகம் 8ஆம் நாள் அறிவித்துள்ளது. இதன் மூலம், ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் ஊழல் எதிர்ப்பு அமைப்புகளிடையே தொடர்பு அதிகரிக்கப்பட்டு, பண மோசடி, சட்டவிரோத வர்த்தகம் முதலியவற்றைத் தடுப்பதில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும்.
எபெக் ஊழல் எதிர்ப்பு பணிக்குழுவை சார்ந்த இவ்வமைப்பு, பல்வேறு உறுப்பு நாடுகளின் ஊழல் எதிர்ப்புப் பணியாளர்களால் செயல்படுத்தப்படவுள்ளது.
அன்றாட தொடர்பு முறைமையை நிறுவுவது, நாடுகளிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, பரிமாற்றம் மூலம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு ஊழல் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்துவது, ஆகிய 3 கொள்கைகளின் அடிப்படையில் இவ்வமைப்பு பங்காற்றும்.