ஆசிய-பசிபிக் பொருகளின் ளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் பங்கேற்க சீனாவுக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய தலைமை அமைச்சர் ஷின்சோ அபெவை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்து உரையாடினார்.
அண்டை நாடுகளாக அமைந்துள்ள சீனா, ஜப்பான் ஆகியவற்றுக்கிடையேயான உறவு சீராகவும் நிலையானதாகவும் வளர்ந்து வருவது, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு நன்மையளிப்பதாக உள்ளது. இரு நாடுகளுக்கிடையே உருவான நான்கு அரசியல் ஆவணங்களை அடிப்படையாக கொண்டு, இரு நாட்டு உறவை வளர்க்க சீனா விரும்புகிறது என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.
வரலாற்றுப் பிரச்சினை, 130கோடி மக்களின் உணர்வுடன் தொடர்பு உடையது. இப்பிரச்சினை, இப்பிரதேசத்தின் அமைதி, நிலைத்த தன்மை, வளர்ச்சி ஆகியற்றுடன் தொடர்பு உடையது. இந்நிலையில், ஜப்பான் தங்களுடைய அரசு அளித்த வாக்குறுதிகளைக் கடைப்பிடித்தால் தான், ஆசியாவின் அண்டை நாடுகளுடன் எதிர்காலத்தை எதிர்நோக்கும் நல்லுறவை வளர்க்க முடியும் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.
சீனாவின் வளர்ச்சி, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு முக்கிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் இரு தரப்புகளுக்கிடையேயான நான்கு பொதுக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தவும் உரிய முறையில் பிரச்சினைகளைக் கையாளவும், இதை புதிய துவக்கமாக கொண்டு சீனாவுடன் உறவை மேம்படுத்தி வளர்க்க ஜப்பான் விரும்புவதாகவும் ஷின்சோ அபெ தெரிவித்தார்.