ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் சீனா முன்னணியில் உள்ளது. அதன் தற்போதைய பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது என்ற போதிலும், தொழில்நிறுவனங்களின் தலைவர்கள் சீனாவில் முதலீடு செய்யும் நம்பிக்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. PWC கணக்குத் தணிக்கை நிறுவனம் 10ஆம் நாள் ஷாங்காயில் வெளியிட்ட ஆய்வு அறிக்கை இதைக் காட்டுகிறது.
தவிரவும் எபெக் உறுப்பு நாடுகளின் தொழில்நிறுவனங்கள் மீதான நம்பிக்கையையும் முதலீட்டளர்கள் குறைக்கவில்லை என்று இவ்வாய்வு சுட்டுகின்றது.
இவ்வாய்வில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்களில் 57 விழுக்காட்டினர் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எபெக் நாடுகளில் உற்பத்தி மற்றும் புழக்க வசதிகள் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.