• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவரின் உரையில் பன்னாட்டு செய்தி ஊடகங்கள் கவனம்
  2014-11-10 18:20:51  cri எழுத்தின் அளவு:  A A A   

2014ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் சி.ஈ.ஓ மாநாட்டின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நிகழ்த்திய உரை, பன்னாட்டு செய்தி ஊடகங்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளது. ஆசிய-பசிபிக் கனவு என்பதை உருவாக்குவதன் மூலமாக, ஆசிய-பசிபிக் பிரதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் அரங்கத்தில் புதிய ஒழுங்குமுறையை அமைக்க சீனா முயல்கிறது என்று வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

சீன கனவு என்பதைத் தொடர்ந்து, ஷிச்சின்பிங் 9ஆம் நாள் முதல்முறையாக ஆசிய-பசிபிக் கனவு பற்றி ஆலோசனையை வழங்கியுள்ளார். உள்ளடங்கிய மற்றும் திறந்த நிலை, ஒத்துழைப்பு, கூட்டாக வெற்றிபெறுவது ஆகியவற்றை அடிப்படையாக கொள்ளும் புதிய ஆசிய-பசிபிக் பிரதேசத்தை அமைக்க சீனா பாடுபடும் என்று சிங்கப்பூரின் லியன்ஹெசாவ்பாவ் எனும் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனின் ஃபைனான்ஷில் டைம்ஸ் நாளேடுவும் ஆசிய-பசிபிக் கனவு என்ற முன்மொழிவில் கவனம் செலுத்தியுள்ளது. சீனா 4000கோடி அமெரிக்க டாலரை அளித்து 'பட்டுப் பாதை நிதியத்தை' அமைத்து, அடிப்படை வசதி கட்டுமானத்தில் முதலீடு செய்வது தொடர்பான அம்சங்களை இந்நாளேடு வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040