சீனாவுக்கு வந்துள்ள ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 9ஆம் நாள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதிய நிலையில் சீனாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு அளவு, மேலும் விரிவாகவும் நெருக்கமாகவும் இருக்கும். எரியாற்றல் துறையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இரு நாடுகளின் எரியாற்றல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இரு நாட்டுத் தலைவர்களும் ஒத்த கருத்துக்களைத் தெரிவித்தனர். தவிரவும், உயர்வேக இருப்புப்பாதை, முன்னேறிய தொழில் நுட்பம், விண்வெளி, நிதி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புகளை அதிகரிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு நாடுகளுக்கிடையே பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்று அறிவிக்கப்பட்டது.