அமைதி, செழுமை மற்றும் நிலைத்ததன்மையுடன் வளர்ந்து வரும் சீனாவை அமெரிக்கா வரவேற்கிறது.
கடந்த திங்கள்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற ஏபெக் அமைப்பின் சி.ஈ.ஓ மாநாட்டில் உரை நிகழ்த்திய அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா இரண்டு முறை இவ்வாறு கூறியுள்ளார். சீன-அமெரிக்க உறவு, ஒபாமாவின் இந்த உரையின் முக்கிய அம்சமாக குறிப்பிடப்படுகிறது.
மேலும், பராக் ஒபாமாவின் பெய்ஜிங் பயணம் பற்றி, அமெரிக்காவின் முக்கிய செய்தி ஊடகங்கள் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, இவ்வூடகங்கள் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன.