• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சார்க் அமைப்புடன் உறவு பற்றிய சீனாவின் கருத்து
  2014-11-26 09:28:54  cri எழுத்தின் அளவு:  A A A   
சார்க் அமைப்புடன் உறவை மேலும் உயர்த்த சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யீங் அம்மையார் நவம்பர் 25ஆம் நாள் தெரிவித்தார்.

சீனா, சார்க் அமைப்பின் பார்வையாளர் நாடாகும். சார்க் அமைப்புடன் நட்புப்பூர்வ ஒத்துழைப்பு உறவுக்குச் சீனா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. சீன வெளியுறவு துணை அமைச்சர் லீயு செங்மின் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி, சார்க் அமைப்பின் 18வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். இவ்வுச்சி மாநாடு வெற்றி பெறச் சீனா விரும்புகிறது. அத்துடன், சார்க் அமைப்பு புதிய வளர்ச்சியைப் பெற்று, தென்னாசிய அமைதி மற்றும் நிதானத்துக்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என சீனா எதிர்பார்க்கிறது என்று ஹுவா சுன்யீங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040