கன்பிஃசியெஸ் அவர்களது ஊரான ஷாங்துங் மாநிலத்தைப் பார்வையிட்ட பின்பு, சீனாவில் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய இளைஞர் பிரதிநிதிக் குழு டிசம்பர் முதல் நாள் ஷாங்காய் மாநகர் சென்றடைந்தது. அங்கு இரண்டு நாட்கள் நீடிக்கும் பயணத்தை மேற்கொண்டுள்ளது. சீனாவின் நிதி மையமான ஷாங்காயில் உயர்வேகத்தில் வளர்ந்துள்ள சீனாவின் பொருளாதாரத்தையும் நகரமயமாக்கத்தையும் நேரில் கண்டு அவர்கள் வியப்படைந்தனர்.