இந்தியாவின் நூறு இளைஞர் பிரதிநிதிக் குழு நவம்பர் 25 முதல் டிசம்பர் 2ஆம் நாள் வரை சீனாவில் 9 நாட்கள் பயணம் மேற்கொண்டது. பெய்ஜிங், சான்துங், ஷாங்காய் ஆகிய பிரதேசங்களில் பயணம் மேற்கொண்ட இக்குழுவினர் உள்ளுர் அரசு வாரியங்கள், பண்பாட்டுத் தளங்கள், இளைஞர் குழுக்கள் ஆகியவற்றுடன் பல்வேறு துறைகள் சார்ந்த செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இரு நாட்டு இளைஞர்களுக்கிடையேயான பரிமாற்றம், இந்திய-சீன நட்புறவு தலைமுறை தலைமுறையாக வளர்வதற்குத் துணை புரியும் என்று இக்குழுவின் தலைவரும் இந்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளருமான லாஜிப் குப்தா தெரிவித்தார்.
இக்குழுவில் புரதிக்ஷா காஷ் என்ற ஒரு நடிகரும் கலந்து கொண்டார். இப்பயணம் தனக்கு மிக மதிப்புக்குரிய அருமையான வாய்ப்பாகும் என்று அவர் கூறினார். அண்டை நாடுகளின் வேறுபட்ட பண்பாடுகள் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமானது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.