• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா. பாதுகாப்பவை, மனித உரிமை பற்றி விவாதத்துக்கு உரிய இடம் அல்ல
  2014-12-19 18:44:18  cri எழுத்தின் அளவு:  A A A   
மனித உரிமை பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக மாற்றுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மனித உரிமை பிரச்சினை பற்றி விவாதம் நடத்துவதற்கு ஐ.நா. பாதுகாப்பவை உரிய இடம் அல்ல எனவும் கருதுவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சின் காங் 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வட கொரியாவின் மனித உரிமை பற்றி ஜப்பான் உள்ளிட்ட 60 நாடுகள் முன்வைத்த வரைவு தீர்மானம், 18ஆம் நாள் நியுயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட 116 நாடுகள் ஆதரவாகவும் சீனா, ரஷியா, கியூபா உள்ளிட்ட 20 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040